Top News

முஸ்லிம்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்


ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­தையும், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தையும் அடி­யோடு இல்­லாமற் செய்­வ­தற்கு  முற்­போக்கு  சிந்­த­னை­களைக் கொண்ட முஸ்­லிம்கள் பொது­ப­ல­சே­னா­வுடன் கைகோர்க்க  வேண்­டு­மென அவ்­வ­மைப்பு  பகி­ரங்க  வேண்­டுகோள்  விடுத்­துள்­ளது. 

நடு­நிலை வகிக்கும்  சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள், ஏனைய மக்­க­ளுடன்  சமா­தா­ன­மாக வாழ­வி­ரும்பும் முஸ்­லிம்கள், புத்தர் சிலை மீது வெறுப்­ப­டை­யாத முஸ்­லிம்கள் என நாட்டில் நிறை­யப்பேர் இருக்­கி­றார்கள். அவர்கள் எம்­முடன்  இணைந்து கொள்­ள­லா­மெ­னவும் அழைப்பு விடுத்­துள்­ளது. 

நாம் வேற்­று­மை­களை மறந்து  தாய்­நாட்டின் நன்­மைக்­கா­கவும், பாது­காப்­பிற்­கா­கவும் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம்  இலங்­கையில் சிங்­கள, தமிழ் மற்றும் இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வா­தத்தைத்  துடைத்­தெ­றி­யலாம் என்றும் தெரி­வித்­துள்­ளது. 

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள  பொது­ப­ல­சே­னாவின்  உத்­தி­யோ­க­பூர்வ  காரி­யா­ல­யத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின்  நிறை­வேற்றுப்  பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே  இவ் அழைப்­பினை விடுத்தார். 

இலங்­கையில் ஐ.எஸ்

இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­திகள் இல்லை என பாது­காப்பு  தரப்பும், உளவுப் பிரி­வி­னரும், அமெ­ரிக்க தூத­ர­கமும் தெரி­வித்­தாலும் இங்கு  ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இருக்­கி­றார்கள். இவர்­களால் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் இருக்­கி­றது என்று  நாம் உறு­தி­யாகக் கூறு­கிறோம். 

ஐ.எஸ். தீவி­ர­வாதம்  பற்றி பொது­ப­ல­சேனா  அமைப்பு  2013 ஆம்  ஆண்டில்  அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது. அக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா ஐ.எஸ்.தீவி­ர­வாத  அமைப்­பைப்­போன்ற ஒரு இயக்கம் என்று பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

கடந்­த­கால  அர­சாங்கம்  ஐ.எஸ்.தீவி­ர­வாதம்  தொடர்­பாக நாம் எவ்­வ­ளவு எடுத்துக்  கூறியும்  அதில் கவனம் செலுத்­த­வில்லை.  பாது­காப்பு  பிரி­வி­னரால் அன்று ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­துக்கு  எதி­ராக நட­வ­டிக்கை  எடுத்­தி­ருக்­கலாம்.  ஆனால்  முஸ்லிம் நாடுகள்  இலங்கை  அர­சாங்­கத்­துக்கு உதவி வழங்கி வந்­ததால்  நட­வ­டிக்கை  எடுக்­கப்­ப­ட­வில்லை. 

 இலங்­கை­யி­லி­ருந்து  உயர்­கல்­விக்­கான  புலமைப் பரிசில் பெற்று பாகிஸ்தான், சவூதி  அரே­பியா போன்ற  நாடு­க­ளுக்குச் சென்­ற­வர்கள் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்பு பட்­ட­வர்­க­ளா­கவே  நாடு திரும்­பினர்.  இவ்­வாறு  மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி  திரும்­பி­யி­ருக்­கி­றார்கள் என அவர்­க­ளது பெற்­றோரே  எம்­மிடம் புகார் செய்­தி­ருக்­கி­றார்கள். 

அளுத்­கம சம்­பவம் 

2014  இல் இடம்­பெற்ற அளுத்­கம  சம்­பவம் ஐ.எஸ். உடன் தொடர்­பு­பட்­டது என நாம் உறு­தி­யாகக் கூறு­கிறோம். ஐ.எஸ். உடன் இச்­சம்­பவம் தொடர்பு பட்­ட­த­னாலே  மஹிந்த  ராஜபக் ஷவோ அல்­லது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ எவ்­வித விசா­ர­ணை­க­ளையும்  முன்­னெ­டுக்­க­வில்லை. அளுத்­கம சம்­ப­வத்தின்  பின்­ன­ணியில் ஞான­சார  தேரரே  இருந்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது. 

ஆனால்  ஞான­சார  தேரர் அளுத்­க­ம­வுக்கு செல்­வ­தற்கு முன்பு  அங்குள்ள  பள்­ளி­வா­சலுக்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் கொழும்பு மற்றும்  காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து அழைத்து  வரப்­பட்­டி­ருந்­தார்கள். இச்­சம்­பவம்  ஐ.எஸ். உடன் தொடர்பு பட்ட குழு­வி­ன­ராலே  முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

ஐ.எஸ்.ஸின்  இஸ்­லா­மிய இராச்­சியம் 

ஐ.எஸ்.அமைப்பின்  இஸ்­லா­மிய இராச்­சி­யத்தின் வரை படத்தில் இலங்கை  ஒரு  மூலையில்  வரை­யப்­பட்­டுள்­ளது.  அதனால் இலங்­கையில்  ஐ.எஸ்.தீவி­ர­வாதம்  காலூன்றி உள்­ளது என்­பதை  நிச்­ச­ய­மாகக் கூற­மு­டியும்.  இலங்­கையில் வஹா­பிசம், இஸ்­லா­மிய  தீவி­ர­வாதம்  காலூன்றி  செயற்­ப­டு­வ­தாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர்  அலவி மௌலானா மற்றும்  ரியாஸ்­சாலி  என்போர் 2007 ஆம் ஆண்­டிலே தெரி­வித்­தி­ருந்­தனர். 

இலங்­கையில்  இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இல்­லை­யென முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், மற்றும் சில  அமைச்­சர்­களும் கூறு­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளது கூற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஐ.எஸ். தீவி­ர­வாதம் தொடர்­பாக  கடந்­த­கால ஜனா­தி­ப­தி­யி­டமும் முறை­யிட்டோம்.  இன்­றைய ஜனா­தி­ப­தி­யி­டமும்  முறை­யிட்­டுள்ளோம்.  கடிதம் அனுப்பி  வைத்­துள்ளோம். அர­சாங்கம் அவ­ச­ர­மாக  இப்­பி­ரச்­சி­னையைக் கையாள வேண்டும். 

விளக்கம் கோரு­கிறோம்

 முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்ட சில விட­யங்­க­ளுக்கும் நாம்  அர­சாங்­கத்­திடம் விளக்கம் கோரு­கிறோம். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வில்­பத்து தேசிய வனத்தை அழித்து மக்­களைக் குடி­யேற்­று­வ­தற்கு  முன்னாள் ஜனா­தி­ப­தியின் காலத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டது. இந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும்  இந்த அழி­வுகள்  மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள  நட­வ­டிக்கை என்ன?

கிழக்கில் ஷரீஆ தீவி­ர­வாத  கல்­வியைப் போதிப்­ப­தற்­காக ஓர் இஸ்­லா­மிய  பல்­க­லைக்­க­ழகம் நிறு­வப்­பட்டு  வரு­கி­றது.  அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் 500  ஏக்கர்  மகா­வலி காணியை  இதற்­காகப்  பெற்றுக்கொடுத்துள்ளார்.  இங்கு போதிக்கப்படவுள்ள கல்வி என்ன? வெளிநாடுகளிலிருந்து  இஸ்லாமிய  மாணவர்கள், தீவிரவாதிகள்,  இப்பல்கலைக்கழகத்தில் கற்கைக்காக வருவதற்கு  வாய்ப்புண்டு. இதனை  அரசாங்கம்  அறியுமா?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்  ஐவேளை  பாங்கு சொல்வதற்கு இடமளிக்கப்பட்டது. அவ்வாறு  இடமளிக்காதிருந்தால் வஹாப்வாதிகள்  வானொலியை   ஆக்கிரமித்திருப்பார்கள் என்று  அதன் அப்போதைய  தலைவர் ஹட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அரசின் நிலைப்பாடு என்ன? என்றார். 

Post a Comment

Previous Post Next Post