Top News

வடகொரியாவுக்கு புதிய தடைகள்: அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆதரவு



வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டி எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை கடந்த 4-ஆம் தேதி வடகொரியா சோதனை செய்தது. ஏற்கனவே வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசேதித்து வருகிறது. இது வடகொரியாவின் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு எரிச்சலை கிளப்பியது.

இயைதடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் மற்றும் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்தது.

ஐ.நா. கவுன்சிலில் நடந்த விவாதத்தின் போது, வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐ.நா. தெரிவித்தது. ஐ.நா.வின் இந்த அறிவிப்புக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் வடகொரியா மீதான தடைக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்தது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது. அதன் உறுதியற்ற தன்மைக்கான விளைவுகளை வடகொரியா அனுபவித்தாக வேண்டும் என்று மூன்று நாடுகளும் கோரிக்கை விடுத்திருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க பிரதமர் டிரம்ப், தென் கொரிய பிரதிநிதி மூன் ஜே-இன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ எபேவின் சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியா மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post