அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா ஆறு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியல் களம் புகுந்துள்ளார். டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராக பொறுப்பேற்ற சமயத்தில் அவரை சில விவகாரங்களில் நேரடியாக சாடிய ஒபாமா, பின்னர் ஆறு மாத காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஜனநாயக கட்சிக்காக நிதி திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
ஜனநாயக கட்சியின் தேசிய ஜனநாயக சீரமைப்பின் குழுவினர் 12 பேரிடம் ஒபாமா கடந்த வியாழன்கிழமை ரகசிய ஆலோசனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய ஜனநாயக சீரமைப்பு குழுக்கு ஒபாமா ஆதரவு அளித்திருப்பது தங்களுக்கு பெருமையளிப்பதாக குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஒபாமா அதிபராக இருந்த போது மாநிலங்களில் அக்கட்சிக்கான செல்வாக்கு சரிந்து இருந்தது. தற்போது அதை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஒபாமா களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment