Top News

எச்­ச­ரிக்­கை­யா­கவே இருக்க வேண்டும் - பிரதமர் ரணில்



நாட்டின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை தீர்க்­கவே தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது. இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செல்­வது மிகவும் கடி­ன­மான பய­ண­மாகும்.

எச்­ச­ரிக்­கை­யா­கத்தான் இருக்க வேண்டும். ஒர­ளவு பிழைத்­தாலும் எங்கு போய் மோதும் என்று தெரி­யாது. எனினும் இவை­ய­னைத்­தையும் அறிந்த பின்­னரே தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம்.

ஆகவே நாட்டின் நலனை கருத்­திற்­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்­வ­தற்கு இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

அத்­துடன் தேசிய அர­சாங்கம் நிறு­வி­ய­மையின் ஊடாக நாட்டின் கடன் சுமையை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்டுவர முடிந்­துள்­ளது. எமக்கு முன்பு போன்று ஆட்சி அமைக்கும் போது எவ­ரது உத­வி­யையும் கோராமல் இருந்­தி­ருக்­கலாம்.

இதனால் நாட்­டிற்கே  பாதிப்­பாக அமையும். ஆகவே தேசிய அர­சாங்­கத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கோ அல்­லது சுதந்­திரக் கட்­சிக்கோ இலாபம் ஏற்­ப­டாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பன்­னிப்­பிட்­டிய பிர­தே­சத்தில் புதிய அடுக்­கு­மாடி வீட்டு திட்­டத்­திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,
நாட்டில் பல்­வேறு துறை­க­ளிலும் பாரிய மாற்­றங்­களை செய்ய வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் நாம் பெரு­ம­ளவில் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வர வேண்டும்.

அதி­க­ள­வி­லான முத­லீ­டு­களை நாட்­டிற்கு கொண்டுவர வேண்டும். 

எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மைய­மாகக் கொண்ட பல திட்­டங்­களை தற்­போ­தைக்கு ஆரம்­பித்‍­துள்ளோம் . எனினும் தற்­போது வரைக்கும் நாம்  4 இலட்­சத்து 20 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

ஆகவே கடனை செலுத்­து­வ­தற்கு போட்டித் தன்­மை­யுடன் கூடிய சந்தை பொரு­ள­தாரம் அவ­சியம். ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்டும். வரி வரு­மானம் அதி­க­ரிக்க வேண்டும். 

பொரு­ளா­தாரம் ஸ்திர­மான நிலை­மைக்கு வரும் போது அர­சாங்­கத்தின் சலு­கையை குறிப்­பிட்ட வர்க்­கத்­தி­ன­ருக்கு மாத்­திரம் வழங்க முடி­யாது. அனை­வ­ருக்கும் வழங்க வேண்டும். மக்­க­ளுக்கு மேலும் சலுகை வழங்க வேண்டும். இதன்­படி  தரம் 13 வரை­யான கல்­வியை கட்­டா­ய­மாக்க வேண்டும். இதன்­மூலம் பாட­சாலை கல்­வியை விருத்தி செய்ய முடியும்.

மேலும் பல்­க­லைக்­க­ழக செல்ல முடி­யா­த­வர்­க­ளுக்கு தொழில்­நுட்பக் கல்­வியை வழங்க உள்ளோம். அத்­துடன் சுகா­தார சேவையை விருத்தி  செய்­ய­வேண்டும். எமது ஆட்­சியில் மேலும் பல மருத்­துவ பீடங்கள் ஆரம்­பிக்­க­வுள்ளோம். 

இதனை தவிர வீடில்­லா­த­வர்­க­ளுக்கு வீடுகள் வழங்க வேண்­டி­யுள்­ளது. யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட  வடக்கு மக்­க­ளுக்கும், மலை­யகம் மக்­க­ளுக்கும் , கொழும்பு வாழ் மக்­க­ளுக்கும் , தொழில் வல்­லு­ந­ர்­க­ளுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். அனைத்து துறை சார்ந்­த­வர்­க­ளுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். இது பாரிய அபி­வி­ருத்தி திட்­ட­மாகும். 

இன்னும் பத்து வரு­டங்­களில் நாட்டில் அனைத்து பிர­தே­சங்­களும் நகர மய­மாகும். வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு நாம் பாரிய வேலைத்­திட்­டங்களை ஆரம்­பித்­துள்ளோம். நாட்­டுக்கு மத்­திய தர வர்க்கம் மிகவும் முக்­கி­ய­மாகும். ஆகவே நாட்டின் பல பகு­திகள் நகர மய­மாகும் போது மாடி வீடுகள் நிர்­மா­ணிக்க வேண்­டி­யுள்­ளது. வாகன நெரி­ச­லையும் கட்­டுப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கான வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம்.

இவ்­வா­றான பிரச்­சி­னை­களை தீர்க்­கவே தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். எமக்கும் முன்பு போன்று நீங்கள் ஒரு­வரும் தேவை­யில்லை என்று கூறி­யி­ருக்­கலாம். ஆனாலும் நாட்டின் நலனை கருத்­திற் கொண்டு இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றாக வேலை செய்து பார்ப்போம்.

நிச்­சய­மாக எம்மால் நாட்டை அபி­வி­ருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இத­னா­லேயே தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது.தற்­போது வெளி­நாட்டு உத­விகள் எமக்கு கிடைக்க பெறு­கின்­றன. தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக பிரச்­சி­னை­களை தீர்த்தால் மக்கள் எம்மை போற்­றுவர். தேசிய அர­சாங்கம் நிறு­வி­யதன் கார­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கோ சுதந்­திரக் கட்சிக்கோ இலாபம் கிடைக்காது. இலங்கை தேசமே நன்மை அடையும்.

ஆகவே, இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பது மிகவும் கடினமான பயணமாகும்.

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்கும் பயணமானது ஒரளவேனும் பிழைத்தால் எங்கு போய் மோதுமோ தெரியாது. ஆகவே இது எச்சரிக்கையான பயணமாகும். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்து பயணிப்போம் என்றார்.

எம்.எம். மின்ஹாஜ்

Post a Comment

Previous Post Next Post