Top News

வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு முஸ்லிம்கள் உதவி



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியா மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் கடைகள், வீடுகளை மறு சீரமைப்பு செய்ய முஸ்லிம்கள் உதவி புரிய முன்வந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஒரு சார்பு மக்களின் உணர்வை தூண்டும் வகையில் 17 வயது மாணவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவொன்றின் காரணமாக கொல்கத்தாவை அடுத்த 24 பரக்னாஸ் மாவட்டத்தில் இரு தரப்பாரிடையே வன்முறை பரவியது. இதில் ஏராளமான கடைகள் வீடுகள் உடைக்கப் பட்டன.
தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்து மக்களின் சொத்துக்களை மறு சீரமைக்க அப்பகுதி முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி கடை உரிமையாளர் அஜய் பால், என் கடைக்குள் நுழைந்த ஒரு கும்பல் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியதோடு, பொருட்களையும் அள்ளிச் சென்றுவிட்டது.
எல்லா சூழல்களிலும் இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம், பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது கூட நாங்கள் அமைதியாக வாழ்ந்து வந்தோம், ஆனால் இப்போது என்ன நடந்ததென்று தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
அதேபோல முஹம்மது நூர் இஸ்லாம் காஜி என்ற அப்பகுதி தொழிலதிபர் கூறுகையில், "மிகவும் ஒற்றுமையாக வாழும் இப்பகுதி மக்களிடையே கடந்த செவ்வாய் அன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. எனினும் நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து இப்பகுதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மறு வாழ்வு அமைத்து கொடுப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமை என்பதாகும்" என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post