Top News

இறுக்கமான உடைகளை அணிவதனால் ஏற்படும் பாதிப்புக்கள்



இறுக்கமான உடைகள் அணிவதை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இது போன்ற உடைகள் சவுகரியமாக இருப்பதாகவும், இதனால் தங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். 
இது தவறான கருத்து என்றும் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தையின்மையை உருவாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
.
நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடை தொடர்ந்து உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாமல் உடலில் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும்.
.
பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
.
டைட் டாப்சும், லெகிங்ஸ் பேண்டும் இன்றைய பெண்களை பெரிதும் கவர்ந்த உடையாகும். காரணம், வேகமாக நடக்கும்போதும், பேருந்துகளில் பயணிக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வேலை செய்யும்போதும், பைக் ஓட்டும்போதும் இந்த பேண்ட் அவ்வளவு வசதியாக இருப்பதாக பெண்கள் கருதுகின்றனர். மேலும் உடலின் அழகை அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர் இளம் பெண்கள்.
.
அதேசமயம், வலி நிவாரண மருத்துவர்கள் லெகிங்ஸ் குறித்து கூறுவது என்னவென்றால், இதுபோன்ற இறுக்கமான உடை அணிவதால் இரத்த ஓட்டம் குறைந்து சதைப்பகுதியில் வலி ஏற்படுமாம். கால்களில் வீக்கம் ஏற்பட்டு நடக்க சிரமப்படுவார்களாம். நாள்முழுதும் நின்றுகொண்டே வேலை செய்பவர்கள் இதுபோன்ற உடை அணியும்போது அவர்களது சதையை இந்த உடை இறுக்கமாக அழுத்தி ஒரே நிலையில் பிடித்துக் கொள்கிறது. 
இதனால் நரம்புப் பிரச்னைகள் வர வாய்புள்ளன. இப்படிப்பட்ட இறுக்கமான ஆடைகளைப் பெண்கள் அணியும்போது அவர்களின் இடுப்புப் பகுதி இறுக்கப்படுகிறது. 
இதனால் *கர்ப்பப்பை* , குடல், சிறுநீரகம் போன்ற பகுதிகளில் இறுக்கம் ஏற்பட்டு அவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய ஆடைகளால் உடலின் வெப்பம், வியர்வை சரியாக வெளியேறுவதில்லை. அதிக அளவு வெப்பம், ஈரப்பதம், வியர்வை காரணமாக பெண்களுக்கு வெர்டினல் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்துமாம்.
.
இந்த வெரிடினல் இன்பெக்ஷன் நாளடைவில் கருக்குழாய், கர்ப்பப்பை வரைக்கும் கூட பரவி பின்பு பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் மிகவும் பிடிப்பான மேலாடைகளை அணியும்போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் தலைவலி, கழுத்துவலி மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர். இனியும் இருக்கமாக உடை அணிய வேண்டுமா?
.
*மூன்று பெண்கள் சுவர்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள்.!!*
*1. ஆடையை இறுக்கமாக அணிபவள்*
*2. ஆடையை அலங்காரமாக அணிபவள்*
*3. ஆடையை மெல்லியதாக அணிபவள்*
( அல் ஹதீஸ் )

Post a Comment

Previous Post Next Post