முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் பகிரங்க, திறந்த பேச்சுவார்த்தையும், கலந்துரையாடலும் விரைவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் வடகிழக்கில் அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் பின்பே கூட்டமைப்பின் யாப்பு வரைபுக்குட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதென்றால் நாம் அதனை வரவேற்கிறோம்.
முஸ்லிம் கூட்டமைப்புக்கு வடகிழக்கில் பெரும்பான்மையான மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். முஸ்லிம் கூட்டமைப்பு அரசியலில் பாரிய மாற்றமொன்றினை உருவாக்கும் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
Post a Comment