சுற்றாடலை பாதுகாக்க மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

NEWS
0


க.கிஷாந்தன்

மலையகத்தில் சுற்றாடல் பாதிப்பினை தடுத்து நிறுத்தி சுற்றாடலை பாதுகாக்கும் முகமாக டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகாமையில் டிக்கோயா ஆற்றின் இருபுறமும் மரம் நடும் வேலைத்திட்டம் ஒன்றினை அட்டன் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனம் மற்றும் டிக்கோயா தோட்ட நிர்வாகம் இணைந்து 05.07.2017 அன்று ஒழுங்கு செய்திருந்தன.

இதன்போது மண்ணரிப்பை தடுத்து நிறுத்தும் குபுக் மற்றும் மூங்கில் போன்ற 130 மர வகைகளின் செடிகள் இதன்போது ஆற்றின் இருபுறமும் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வுக்கு டிக்கோயா தோட்ட உதவி முகாமையாளர் சரண் எதிரிசிங்க, தோட்ட வைத்தியர் ஞானவந்தன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top