Top News

தடை நீக்கம் பெற்று ஆப்கானிஸ்தானின் பெண்கள் அமெரிக்கா விஜயம்


ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெறவுள்ள றோபோ போட்டியொன்றில் கலந்துகொள்வதற்கு முயன்று, விசா மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பெண்கள் அணியொன்று, அப்போட்டியில் பங்குபற்றவுள்ளது என, அப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையின் பின்னர், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளிலிருந்து ஐ.அமெரிக்காவுக்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்னணியில், இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. ஏனைய சில நாடுகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.
இதில், இந்த ஆப்கான் பெண்கள் அணி தொடர்பான கவனம் அதிகரித்து, பரவலான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தினார். இதையடுத்து, தற்போது இந்த அணிக்கும் இன்னும் சில அணிகளுக்குமான அனுமதி கிடைத்துள்ளது.
ஈரான், சூடான், யேமன், லிபியா, மொரோக்கோ, சிரிய அகதிகள் அடங்கிய அணியொன்று உட்பட, 157 நாடுகளைச் சேர்ந்த 163 அணிகள், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 6 நாடுகளான ,ரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகியவற்றிலிருந்து, ஐ.அமெரிக்காவுக்குள் வருவதற்கான ஜனாதிபதி ட்ரம்ப்பின் தடைக்கு, உச்சநீதிமன்றம், அண்மையில் இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. இந்தப் பட்டியலில், ஆப்கானிஸ்தான் இடம்பெறாத போதிலும், அவர்களுக்கான விசா மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post