சர்வதேச நாடுகளும், நிறுவனங்களும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ முன்வருமானால் நிலையான சமாதானத்தையும் தொலைதூர இலக்குகளையும் விரைவில் அடைய முடியுமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் சமாதான குறிகாட்டிகளை மதித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் சர்வதேச நாடுகளின் உணர்வை மதிப்பதாகவும் தொடர்ந்தும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பணம் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் வலய நாடுகளின் 20ஆவது மாநாடு நேற்று ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இதன்போது சிறப்புரை ஆற்றிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிய பசுபிக் வலய நாடுகளின் பணம் தூய்மையாக்கல் தொடர்பான மாநாடு இலங்கையில் நடைபெறுவது பெருமைக்குரிய விடயமாகும். 41 உறுப்பு நாடுகளும் பல்வேறு அரச சார்பு மற்றும் அரச சாராத நிறுவனங்கள் பங்குகொள்வதன் மூலம் இலங்கை பல முன்னேற்றகரமான அனுபவங்களை அடைந்துகொள்ள முடியும்.
உலக நாடுகளும் பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியிடலை கட்டுப்படுத்த ஒன்றிணைந்துள்ளது. ஆசிய பசுபிக் வலய நாடுகளின் பொருளாதார வளம் குறித்த இரு துறைகளுக்கும் அவசியமானதொன்றாகும். குறிப்பாக அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் நிதியியல் கட்டுப்பாட்டு கொள்கைகள் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை, பயங்கரவாதத்துக்கு எதிரான சவாலை நிலையாக காண்டுசெல்ல வேண்டும். இதற்கு சந்வதேச நாடுகள் இன்று ஒன்றிணைந்துள்ளதன் மூலம் அதற்கான அர்ப்பணிப்பை என்னால் உணர முடிகின்றது.
பயங்கரவாத்த்துக்கு எதிராக நிதியிடல், போதைப்பொருள் கட்டுப்பாடு,, பணம் தூய்மையாக்கல் ஆகிய சவால்மிக்க பகுதிகளில் நமது முழுமையான செயற்றிறனை வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கையின் வரலாறும் பாரம்பரியங்கள் கட்டமைக்கப்பட்டவையாகும். அர்ப்பணிப்பு மிக்க சமூகத்தின் மூலமே சமாதானத்தையும் சிறந்த ஆட்சியையும் உருவாக்க முடியும்.
அதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகளை தெளி வாக வரையறுக்க முடிந்துள்ளது.
விடிவெள்ளி
Post a Comment