கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ நாளை (04) பதவியேற்கவுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து அவரது செயலாளராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னாண்டோ ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலர் பதவியை ஏற்றுக்கொள்ள தான் இணங்கியுள்ளதாக ஒஸ்ரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைவிட்டு தாம் விலகவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2001, 2004 வரையான காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலராக பணியாற்றிய ஒஸ்ரின் பெர்னாண்டோ, 2015ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும், கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்தே, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இந்த நியமனம் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை பீடத்திற்கு அதாஉல்லாலை நியமிக்க வேண்டும் என ஒரு விருப்பம் உள்ளது, ஆனாலும் ஐக்கிய கட்சி சார்பில் தயாரத்ன பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment