அஸ்மி ஏ கபூர்
மகிந்த ராஜக்சவுடைய ஆட்சி முஸ்லீம்களின் வாக்குகளை அதிகளவாக பெறாமல் அமைக்கப்பட்டது. ஏற்கனவே சரத் பொன்சேகாவை வைத்து சதி செய்தவர்கள் மீண்டும் முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டி அவர்களின் அதிக வாக்குகளை பெற்றே நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறினார்கள்.
இனறு முஸ்லீம் சமுகம் பொல்லை கொடுத்து அடியை வாங்குகிறார்கள்.
இனறு முஸ்லீம் சமுகம் பொல்லை கொடுத்து அடியை வாங்குகிறார்கள்.
சிறுபாண்மை இனங்களை நிர்க்கதிக்குள் தள்ளும் ரணிலின் சூழ்ச்சி இன்று தமிழ் சமுகத்தையும் ஆட்டி வைக்க முனைகின்றது அதை தமிழ் தேசியம் மிகச சரியாக புரிந்து கொள்ளும் அதன் அங்கமே இன்று விக்னேஸ்வரன் சம்பந்தன் பிளவு என வியாபித்திருக்கிறது
இவ்வாறான ஒரு காலம் உருவாகக் கூடாது, என்று தான் தேசிய காங்கிரஸ் தலைமை விரும்பியது . முஸ்லீம்கள் தமக்கு நிகழ்ந்த துயரங்களுக்கான தற்காலிக தீர்வை பெறுபவர்களாக இருந்தார்களே ஒழிய இதன் உருவாக்கம் தொடர்பில் பேச சிந்திக்க மறந்தனர்
இவ்வாறான ஆட்சியையும் கூட்டையுமே அதாஉல்லாஹ் உதறினார். அதனாலேயே அவர் அதிகாரத்தை இழந்தார். இருந்தாலும் தனது கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைதிரி வந்தார். அந்த கூட்டமைப்பை தவிர இணைந்து செயற்பாட வேறு தீர்மானிக்கும் சக்தி கொணட கட்சிகள் இல்லை என்கிறதால் நாம் தொடர்ந்து அதே கூட்டில் அங்கம் வகிக்கிறோமே தவிர ரணிலுனான கூட்டு ஆட்சியில் இல்லை.
இன்று அரசாங்க ஊது குலலான ஆசாத்சாலியே அவர்கள் தவறிழைத்ததாக கூறுகின்ற நிலை தோன்றி இருக்கிறது அளுத்கம விபத்தில் ராஜித சேனாரத்னவின் சூழ்ச்சி அம்பலபட்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்புரிமை ,அமைச்சு பதவி இதர அதிகாரங்களை பெற நல்லாட்சி என நாம் வால் பிடித்திருந்தால் இலகுவில் கிடைத்திருக்கும்
பைசர் முஸ்தபா போன்ற பத்து வாக்குமில்லாதவர்கள் அமைச்சர்களாக இருந்து சமுகத்தை காட்டி கொடுக்கும் போது நாம் அதை செய்ய முடியும்
பைசர் முஸ்தபா போன்ற பத்து வாக்குமில்லாதவர்கள் அமைச்சர்களாக இருந்து சமுகத்தை காட்டி கொடுக்கும் போது நாம் அதை செய்ய முடியும்
ஆனால் பதவி, பட்டம், என்பதை விட சமுகம் என்கின்ற அமானிதத்தை விற்று அதாஉல்லாஹ் சில்லறை அதிகாரங்களை பெற மாட்டார். இதுவே எமது நிலைப்பாடு
சமுகத்தை ஏமாற்றி சூழ்ச்சி செய்த அனைவரும் தோலுரிக்கப்பட வேண்டும். முஸ்லீம் சமுகம் வீறு கொண்டு தலைவர்களாக தங்களை பிரஸ்தாபிக்கும் நபர்களை விரட்ட வேண்டும்
முஸ்லீம்களின் வாக்குகளை பெற வேண்டுமென அதாஉல்லா ஒரு போதும் சமுகத்தை விற்று நாடகங்களை அரங்கேற்ற போவதில்லை. தலைமை என்பது சமுகம் தான் என்பதும் அது சமுக நலனை மையப்படுத்தியது எனவும் உணர வேண்டும்.
இந்த நாட்டின் பிரதமர் பதவி தருவாக இருந்தாலும் முஸ்லீம்களுக்கெதிரான சதிகார அரசில் அதாஉல்லாஹ் போன்ற தலைவர்கள் பெற மாட்டார்கள்
Post a Comment