இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் எவின் லீவிஸ் அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட்இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது. அவர் 62 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் 12 சிக்சர்களும் அடங்கும்.
27 வயதான லீவிஸ் 20 ஓவர் ஆட்டத்தில் எடுத்த 2-வது சதமாகும். இதற்கு முன்பும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் அவர் 49 பந்தில் 100 ரன் (5 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்தார்.
20 ஓவர் போட்டியில் இரண்டு செஞ்சூரி அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பெற்றார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), பிரண்டன் மெக்கல்லம் (நிïசிலாந்து) ஆகியோருடன் அவர் இணைந்தார்.
20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களின் 3-வது இடத்தை லீவிஸ் பிடித்தார். ஆரோன் பிஞ்ச் 156 ரன் குவித்து முதல் இடத்திலும், மேக்ஸ்வெல் 145 ரன்கள் குவித்து 2-வது இடத்திலும் உள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு கிறிஸ்கெய்ல் 117 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சேசிங்கில் (2-வது இன்னிங்சில்) அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் லீவிஸ் படைத்தார். இதற்கு முன்பு ஓமனுக்கு எதிராக ஆங்காங் வீரர் பாபர் ஹயாத் 122 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் 16 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை லீவிஸ் பெற்றார். ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) 14 சிக்சர்களும், ரிச்சர்டு லெவி (தென்ஆப்பிரிக்கா) 13 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
Post a Comment