இளைய சகோதரர்கள் மூவரால் குடும்பத்தின் மூத்த சகோதரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று எஹலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதி எஹலியகொட எனும் முகவரியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் 34 வயதுடைய மொஹமட் அய்யூப் மொஹம்மட் பவ்மி எனும் நபரே கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை 9.15 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், கத்திக் குத்து மற்றும் தாக்குதலால் படுகாயமடைந்த குறித்த சகோதரன் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதை அடுத்தே பொலிசார் விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருக்கு இடையே நேற்றுக் காலை ஏற்பட்ட பிரச்சினை ஒன்றே இந்த கொலைக்கு காரணம் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியான நிலையில், சந்தேக நபர்களான ஏனைய மூன்று சகோதரர்களையும் எஹலியகொட பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்றுக் காலை குறித்த நான்கு சகோதரர்களிடையே மின் கட்டணப் பட்டியல் ஒன்றினை மையப்படுத்தி வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது மூத்த சகோதரன் மீது ஏனைய சகோதரர்கள் மூவரும் கத்தியால் குத்தி, பொல்லால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்பட்டவரின் சடலம் எஹலியகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எம்.எப்.எம்.பஷீர்
Post a Comment