Top News

மீராவோடையில் பெளத்த பிக்குவின் தலையீடு தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர்குளைக்கும்



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


மீராவோடையில் 10 நாட்களுக்குள், முஸ்லிம்களை அகற்றுவேன் –அல்லது பத்து தினங்களுக்குள் மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள முஸ்லிம் குடியேற்றங்களை அகற்றித் தருவேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளமையானது கல்குடா பிரதேசத்தில் ஒரே மொழியுடனும், இன ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் ஒற்றுமையினை சீர்குளைக்கின்ற விடயம் என சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு கல்குடா மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 18- 07-2017 செவ்வாய்கிழமை காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் இடம் பெற்ற இடத்திற்கு திடீர் என வருகை தந்த மட்டக்களப்பு மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறு தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையே பிளவினை ஏற்படுத்தும் வகையிலும், வழமை போன்று பொறுப்பற்ற வகையில் தான் தெரிவிக்கின்ற கருத்தினை போன்று அவ்விடத்திலும் நடந்து கொண்டுள்ளமையினை வன்மையாக கண்டிப்பதாகவும் தொடர்ந்து தன தறிக்கையில் பொறியியலாளர் நாபீர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையினை அண்டிய பிரதேசத்திலிருந்து கடந்த யுத்தகாலங்களில் முஸ்லிம்கள் முற்றாக இடம் பெயர்ந்திருந்தமை இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுடைய அத்துமீறிய குடியேற்றம் அல்லது குறித்த பாடசாலை காணி அபகரிப்பு தொடர்பில் இரு சமூகங்கங்களையும் பிரதி நிதித்துவபடுத்துகின்ற முக்கியஸ்தர்கள், மத குருமார்கள், படித்தவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அல்லது சட்டரீதியாக பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் அல்லது அதையும் தாண்டி நீதி மன்ற உத்தரவு போன்ற விடயங்கள் மூலமே குறித்த விடயத்திற்கான தீர்வினை நியாயம் உள்ள தரப்பினர் பெற்றுக்கொள்ளவது அல்லது அவர்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படுவது எதார்த்தமானதும் சுமூகமானதுமான தீர்வாகும்.

அதை விட்டு குறித்த பிரச்சனை உள்ள பிரதேசத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சமூகமளித்து மீராவோடையில்  இருந்து 10 நாட்களுக்குள் முஸ்லிம்களை அகற்றுவேன் என பகிரங்கமாக தமிழ் முஸ்லிம் ஒற்றுமையினை விரிசலாகக்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பதானது மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும் இந்த நாட்டில் என்னதான் நடக்கின்றது என சிந்திக்க தூண்டுகின்ற விடயமாகவும் இருக்கின்றது.

அத்தோடு குறித்த தேரரின் அறிக்கை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் அணைவரும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதோடு, இரு சமூகங்களையும் சார்ந்த சமூக சிந்தனையாளர்கள் நடு நிலையாக இருந்து குறித்த பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் தரப்பினரின் தலையீடுகளை தவிர்த்து பிரச்சினையினை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post