பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதில் 7 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Post a Comment