(க.கிஷாந்தன்)
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் “சுற்றாடல் புனிதமானது” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 20.07.2017 அன்று நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக சிரமதானம் ஒன்று இடம்பெற்றது.
கொட்டகலை வைத்தியசாலை பகுதியிலிருந்து, பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி வரை காலை முதல் மதியம் வரை மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன.
நுவரெலியா பிரதேச சபையினர் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணிகளில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதோடு, பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி வளாகப்பகுதிகளிலும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மேலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இதன் போது இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட்டது.
இச்சிரமதானப் பணிகளில் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் மாணவ, மாணவிகள், நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், அதிகாரிகள், சுகாதார பரிசோதகர் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment