Top News

இடம்­பெ­யர்­­ந்தோரின் வாக்­கு­ரி­மையில் மாற்றம் தேவை: பாராளுமன்­றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்­கீம்



(பிறவ்ஸ்)

இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.  

இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்கா­ன "தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்" தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் (04) இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் உரை­யாற்­று­கையில் மேலும் கூறி­ய­தா­வ­து;

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நீதியமைச்சர், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக, நான்கு வருடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடாக, இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

யுத்தம் மற்றும் பயங்­க­ர­வா­த நட­வ­டிக்கை காரணமாக இடம்­பெ­யர்ந்து வெளிமா­வட்டங்­களில் தங்­கி­யி­ருப்போர், வாக்­காளர் இடாப்பில் தங்­க­ளது பெயர்­களை பதி­வு­செய்­ய­வேண்­டு­மாயின், தங்­க­ள­து சொந்த மாவட்டத்தில் அவர்­க­ளுக்கு சொந்­த­மாக வீடு இரு­க்­க­வேண்­டு­மென ஏற்­க­னவே உள்ள தேர்தல் சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ள­து.

இடம்­பெ­யர்ந்து வெளிமாவட்­டங்­களில் தங்­கி­யி­ருப்­­போர், சூழ்­நிலை கார­ண­மா­கவே அங்கு இருக்­கின்­றனர். தங்­க­ளது சொந்த இருப்­பி­டங்­க­ளில் மீள்­கு­­டி­யேற விரும்­பி­னாலும் அர­சாங்கம் அதற்காக செய்­கின்ற பங்­க­ளிப்பு போதைமை, பொருத்து வீடுகள் பிரச்­சி­னை மற்றும் பொரு­ளா­­தாரப் பிரச்­சி­னைகள் கார­ண­மாக அது முடி­யா­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில், அங்கு அவர்­க­ளுக்கு வீடுகள் இருக்­க­வேண்­டு­­மென எதிர்­பார்க்க முடியா­து.

இது­தொ­டர்­பாக, அமைச்­ச­ரி­டமும் தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திடமும் நாங்கள் பல தட­வைகள் பேசிய பின்னர், தேர்தல் திணைக்­க­ளத்தின் தவி­சாளர் ஏற்­க­னவே உள்ள ஏற்­பாட்டின் பிர­காரம் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை 4 வரு­டங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். ஆனாலும், விருப்­ப­மில்­லா­ம­லேயே தேர்தல் திணைக்­க­ளத்தின் தவி­சாளர் இந்த அனு­ம­தியை கொடுத்­துள்­ளார்.

வேறு மாவட்­டங்­களில் வாக்­கா­ளர் இடாப்பில் தங்­க­ளது பெயர்­க­ளை பதி­வு­செய்­யாத இடம்­பெ­யர்ந்த வாக்­காளர்கள், சொந்த மாவட்­டங்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கான ஏற்­பாடு­களை தேர்தல் திணைக்­களம் செய்­து­கொ­டுக்­க­வேண்டும். சொந்த மாவட்­டத்தில் வீடு இருக்­கி­றதா இல்­லையா என்ப­து அதற்கு தடை­யாக இருக்கக்­கூ­டாது. இடம்­பெ­யர்ந்தோர் வாக்­க­ளிப்­ப­தற்­கான மாற்று ஏற்­பா­டுகள் குறித்­து­கூட சிந்­திக்க விருப்­ப­மில்­லாத ஒரு­வ­ரா­கத்தான் தேர்­தல்கள் ஆணை­யாளர் இருக்­கி­றார்.

வட மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களினதும் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காப்­ப­தற்­காக இந்த வாக்­கு­ரி­மைகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். தற்­கா­லி­க­மாக 4 வரு­டங்­க­ளுக்குத்தான் அவர்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் தற்­போது வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அந்த 4 வரு­டங்­க­ளுக்குள் அர­சாங்கம் அனை­வ­ரையும் மீள்­கு­டி­யேற்­றி­வி­டு­மா என்­பது இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கத்தான் இருக்­கி­ற­து.

இதனால் தற்­கா­லி­க­மாக தங்­கி­யி­ருக்­கின்ற மாவட்­டத்­தில்தான் இடம்­பெ­யர்ந்­த­வர்­கள் வாக்க­ளிக்­க­வேண்­டு­ம் என்ற நிர்ப்­பந்­தத்­துக்குள் அவர்­களை தள்­ளு­கின்­ற சூழல் உரு­வாகும். இதை, ஐக்கிய நாடுகள் சபையின் சாச­னத்தின் பிரகாரம், வெளியேற்­றப்­பட்ட அகதி தனது சொந்த இடத்­துக்கு திரும்­பிச் சென்று வாக்­க­ளிக்­கின்ற உரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். 

Post a Comment

Previous Post Next Post