பாகிஸ்தான் - ஈரான் எல்லையில் துப்பாக்கிசூடு: ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் பலி

NEWS
0


ஈரான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த திவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பத்து பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து ஊடுருவலை தடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு ஈரான் ஜனாதிபதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நேற்று எல்லைப்பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த திவிரவாதிகள் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு அப்பாவி ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்.



இச்சம்பவத்தை பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த ஈரான் ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் திவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான், இருவர் காயமடைந்தனர். மற்றவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடிவிட்டதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top