டெங்கு தொற்று காரணமாக பாடசாலை சீருடையில் தற்காலிக மாற்றம்

NEWS
0


டெங்குத் தொற்று, பாடசாலை மாணவர்களிடையே மிகவும் விரைவாக பரவிச் செல்கின்றமையினால், பாடசாலைச் சீருடையை தற்காலிகமாக மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் சுற்றறிக்கை, இன்னும்  இரண்டு தினங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஊடகங்களுக்கு இன்று (5) தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“குட்டைக் காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீளமான காற்சட்டையுடனும், மாணவிகளுக்கு உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான சீருடைகளுடன், பாடசாலைக்கு வருகை தர முடியும்” என, அவர் மேலும் ​தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top