(அஷ்ரப் ஏ சமத்)
அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார சிரேஸ்ட விரிவுரையாளரும் அவுஸ்திரேலியா பிரதமரின் இஸ்லாமிய மத விவகார ஆலோசகருமான பேராசிரியா் அமீர் அலி (காத்தான்குடி) அவா்களின் தந்தை காலம்சென்ற கவிஞா் அப்துல் காதா் லெப்பையினால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ”இலங்கை முஸ்லீம்களும் இஸ்லாமும்” எனும் நுால் நேற்று(15) கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியா் அமீர் அலி கலந்து கொண்டாா். இந் நுால் வெளியீட்டு விழாவினை அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
நுாலின் முதற்பிரதியை தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவா் சட்டத்தரணி மிஹ்லான் லத்தீப் நுாலசிரியா் அமிர் அலியிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வு ஆய்வு மன்றத்தின் தலைவா் சட்டத்தரணி மசூம் மௌலானா, தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ் முற்போக்கு முன்ணனியின் தலைவா் சட்டத்தரணி கஜேந்திரக் குமாா். சித்திலெப்பை மன்றத்தின் வெளியுறவுச் செயலாளா் டொக்டா் றிசி, செயலாளா் பொறியியலாளா் நியாஸ் ஏ சமத் முன்னாள் பிரதியமைச்சா் சட்டத்தரணி எஸ் நிஜாமுததீன் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய பேராசிரியா் அமீர் ்அலி -
அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மன்றத்துடன் வட கிழக்கு வாழும் முஸ்லீம் - தமிழ் உறவுகளை மீள கட்டியெழுப்பு மாறும் இதற்காக ஒவ்வொரு தமிழ் முஸ்லீம் கிராமங்கள் ஊடாகச் சென்று கடந்த 30 வருடங்களுக்கு முன் பிட்டும் தேங்காய் போன்று இருந்த உறவுகளை நீங்கள் கட்டியெழுப்ப வேண்டும்.
இதற்காக கஜேந்திரக்குமாா் கட்சியும் அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மன்றமும் அடிமட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் சென்று தமிழ் முஸ்லீம் என்று இல்லாம் எல்லோரும் நாங்கள் என்ற ரீதயில் மக்களை தெளிவுபடுத்தி பழைய உறவினைக் கட்டியெழுப்புமாறு வேண்டிக் கொண்டாா்.
இதன் பின்னா் அரசியல் தீா்வு பொதிகள் முஸ்லீம்களுக்கான பங்கு அவா்களது அபிலாசைகள் பற்றியும் பறிமாறக் கொள்ளுமாறும் அதனை மனம்விட்டு இரண்டு சமுகம் பேசுவதற்கும் இக் கூட்டத்தில் முடிபு எடுக்கப்பட்டது.
Post a Comment