பாராளுமன்றத்தில் இன்று (05) முன்வைக்கப்படவிருந்த காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலத்தை முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதன் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவிருந்த காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலத்தின் சிங்கள, தமிழ் பிரதிகளை பாராளுமன்றத்திலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் வரையில் இச்சட்ட மூலத்தை ஒத்திவைக்குமாறு மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மீண்டும் கவனத்தில் கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இல்லாத பிரச்சினைகளை உருவாக்கும் அரசியல் யாப்பு நாட்டுக்குத் தேவையற்றது என மூன்று மகாசங்கத்தினரும் நேற்று ஏகமனதாக தீர்மானம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment