இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். ஜெருசலேம் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்திற்கு சென்றார். அதைத்தொடர்ந்து தியோடர் ஹெர்சல் நினைவகத்திற்கு திடீர் வருகை புரிந்தார். பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மனிதம் மற்றும் நாகரீக மதிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக போராட முன்வர வேண்டும். அதற்கான காலம் இது என்று பிரதமர் மோடி பேசினார். உலத்தையே உலுக்கி வரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றுசேர வேண்டும் என்றார்.
தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதற்கு யெட் வாஷம் ஒரு உதாரணம் என்றும் மோடி கூறினார். மேலும் யெட் வாஷம் தாக்குதலில் உயிரிழந்த 6 லட்சம் யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் அந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment