Top News

அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்கப் போவ­தாக வெளி­யான செய்­தி­க­ளுக்கு விமானப் படை, பொலிஸ் மறுப்பு



இரத்­ம­லா­னையில் உள்ள விமான நிலை­யத்தில் இருந்து விமானப் படை­யி­னரின் ஹெலிகள்,  விமா­னங்­களை பயன்­ப­டுத்­தியோ அல்­லது சிவில் விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­தியோ  சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ். அமைப்பு தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக எந்த சிறப்பு எச்­ச­ரிக்­கை­களும் எமக்கு கிடைக்­க­வில்லை.

எனினும் ஐ.எஸ். உள்­ளிட்ட எந்த அமைப்பின் சதி­க­ளையும் முறி­ய­டிக்கும் வித­மாக இரத்­ம­லானை விமான நிலை­யத்தின் பாது­காப்­பா­னது பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே உள்­ள­தாக விமா­னப்­படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் கிஹான் சென­வி­ரத்ன  தெரி­வித்தார்.

இரத்­ம­லா­னையில் விமானப் படை­யி­னரின் பூரண பாது­காப்பு கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள விமான நிலை­யத்தில் இருந்து விமானம் ஒன்­றினை கடத்தி கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை தகர்க்க ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க உளவுத் துறை கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்கள் தொடர்பில் விமா­னப்­படை பேச்­சா­ளரை தொடர்­பு­கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் விமானம் ஒன்றை கடத்திச் சென்று கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ளது என அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு அறி­வித்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இவ்­வா­றான நிலை­மைக்கு இட­ம­ளிக்­காது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அமெ­ரிக்க பாது­காப்பு தரப்பு இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தாக அந்த செய்­தி­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலைமை கார­ண­மாக அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு மற்றும் சிவில் அதி­கா­ரிகள் இலங்கை வந்­துள்­ள­தாக அந்த செய்­திகள் தெரி­வித்­தன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­க­ரவை தொடர்­பு­கொண்டு கெட்ட போது, அவ்­வா­றான எந்த தக­வலும் தனக்கு இது­வரைக் கிடைக்­க­வில்லை எனவும் தேசிய பாது­காப்பு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட விட­யங்கள் குறித்து உடன் கருத்து தெரி­விக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் , ' இந்த தக­வல்­களை நானும் ஊட­கங்கள் ஊடாக அறிந்தேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்­து­ரைக்க முடி­யாது.

  இது வரை எமக்கு எந்­த­வொரு விஷேட தாக்­குதல் திட்டம் குறித்தும்   எச்­ச­ரிக்­கைகள் கிடைக்கப் பெற­வில்லை. சாதா­ர­ண­மாக விமான நிலை­யத்­துக்கு, ஐ.எஸ். என்­றில்­லாது எந்­த­வொரு சதி­யையும் முறி­ய­டிக்கும் வித­மான 24 மணி நேர சிறப்பு பாது­காப்பே வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்கும் விதமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தனியான ஒரு குழுவையோ பிரிவையோ இலக்கு வைத்து பாதுகாப்பு நடவடிக்கை இல்லை. அனைத்து சதிகார நடவடிக்கைகளையும் முறியடிக்கும் விதமாக பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளது'' என்றார்.

எம்.எப்.எம்.பசீர்

Post a Comment

Previous Post Next Post