(க.கிஷாந்தன்)
ஊவா மாகாணத்தில் நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக விவாசாயிகள் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் தோட்ட மக்களும், கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் தற்போது இருக்கும் காலநிலையின் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
உமாஓயா மற்றும் ஹால்ஓயாகளில் நீர்மட்டம் குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இவ்வாறு அமைந்துள்ளது.
அந்தவகையில்….
கோவா ஒரு கிலோ விலை – 60 ரூபா தொடக்கம் 75 ரூபா வரை
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 170 ரூபா தொடக்கம் 190 ரூபா வரை
உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 130 ரூபா
போஞ்சி ஒரு கிலோ விலை – 110 ரூபா தொடக்கம் 120 ரூபா வரை
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 220 ரூபா தொடக்கம் 250 ரூபா வரை
சலாது இழை - 95 ரூபா
கரட் ஒரு கிலோ விலை – 120 ரூபாவிலிருந்து 160 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
Post a Comment