அலுவலக மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒரே தரத்தில் அமைந்த கெளரவமான ஊடக அடையாள அட்டை ஒன்றை அறிமுகப்படுத்த, நிதி மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது, அலுவலக ஊடகவியலாளர்களுக்கு "ஊடகவியலாளர்" என்றும், பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு "பிராந்திய ஊடகவியலாளர்" என்றும் வேறுபட்ட ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இனிமேல், பிராந்திய ஊடகவியலாளர்களையும் கெளரவப்படுத்தும் நோக்கில், "பிராந்திய" என்ற சொல் நீக்கப்பட்டு, அவர்களுக்கும் "ஊடகவியலாளர்" என்ற சொல் மாத்திரம் பொறிக்கப்பட்டு பொதுவான, பாதுகாப்பான, கெளரவமான ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு, ஊடக அமைச்சு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக, சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி தெரிவித்துள்ளார்.
பிரதேச மட்டத்தில் நாள் தோறும் செய்திகளைச் சேகரிப்பதற்காக, சமூகப் பணிகளை மாத்திரம் விசேட நோக்காகக் கொண்டு, மிகவும் அர்ப்பணிப்புடனும் துனிச்சலுடனும் செயற்படும், பத்திரிகை மற்றும் இலத்திரனியல் பிராந்திய ஊடகவியலாளர்களின் கெளரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த சிறப்பு ஊடக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
( மினுவாங்கொடை நிருபர் )
Post a Comment