ஏ.எஸ்.எம்.தாணீஸ்
கிழக்கு மாகாண சபையின் 80 சபை அமர்வு இன்று 18 காலை 9.15 மணியளவில் சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டீ.டீ.மெத்தானந்த டீ சில்வா சபையில் தனி நபர் பிரேரணையொன்றை முன் வைத்தார்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் பிரிவிற்கு மீன்பிடிப் பரிசோதகர்கள் இருவரை நியமனம் செய்வதற்கான முன்மொழிவொன்றினை முன்வைத்து உரையாற்றும்போது கிழக்கு மாகாண சபையின் மீன்பிடி பரிசோதகர்கள் ஆட்சேர்ப்பில் சிங்கள இனத்தைச் சேர்ந்த எவரையும் நியமிக்கவில்லை மாகாண சபையினால் வழங்கப்படும் எந்தவொரு நண்மையும் சிங்கள பிரதேசத்தில் உள்ள மீனவர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இப் பிரேரணை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்தில் சட்டத்தை இரு சாராருக்கும் சமமாக அமுல் படுத்த வேண்டும்.திருகோணமலை கந்தளாய் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் முஸ்லிம் மக்களுக்கு வீச்சு வளைக்கு தடையும் இதே தொழிலைச் செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக செயற்படுவதும், பாரபட்சம் காட்டுகின்ற நிலையும் காணப்படுவதாக குறிப்பிட்டார்.இதன் போது குருக்கிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிறிஸ்ணப்பிள்ளை உரையாற்றும் போது கந்தளாய் பிரதேசத்தில் சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் மாத்திரம் இல்லை தமிழ் மக்களும் வாழ்கின்றார்கள் என்பதை உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் உரையாற்றும் போது கந்தளாய் பிரதேசத்தில் மூவின மக்களும் வாழ்கின்றனர்.இவ் மூவின மக்களும் கந்தளாய் குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 49 முஸ்லிம் குடும்பங்கள் வீச்சு வளையினை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கந்தளாய் மீன்பிடி பரிசோதகர் தடை விதிப்பதாக தெரிவித்தார்.
இவை அனைத்துக்கும் விவசாய மீன்பிடி அமைச்சர் கி.துரை ரராஜசிங்கம் பதிலளிக்கையில் மீன்பிடி துறை என்பது மாகாண சபையுடனும் மத்திய அரசுடனும் தொடர்புபட்ட விடயமாகும்.இதற்கு வழக்காறுகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. சட்டத்தின் மூலமே இவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
Post a Comment