அமெரிக்காவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கியை வைத்துக்கொள்ள கன்சாஸ் மாநிலம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் அடிக்கடி மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் உள்பட ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனைத் தடுக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கன்சாஸ் மாநிலத்தில் கல்லூரி வளாகத்தில் ஏற்படும் துப்பாக்கி சூட்டை தடுக்க மாநில சட்டமன்றம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
இந்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பொது கட்டடங்களுக்கும் பொருந்தும். ஆனால் மத்திய கிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை 1 ஆம் திகதி முதல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களைக் காப்பாற்றுவதற்கு ஆயுதங்களைத் தாங்கும் உரிமை அவசியம் என கன்சாஸ் ஆளுநர் சாம் பிரவுன்பேக் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் அர்கனாஸ், ஜார்ஜியா மற்றும் சில நாடுகளில் ஏற்கனவே இருக்கிறது. தற்போது, கன்சாஸ் இணைந்துள்ளது. ஆனால் கலிபோர்னியா மற்றும் தென் கரொலினா உட்பட 16 மாகாணங்களில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சட்டத்துக்கு சில கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனுடைய நோக்கம் குறித்து விவரித்த போதும், சில ஆசிரியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 70 சதவிகித ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் துப்பாக்கிகளை தடை செய்யும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதே சமயத்தில் விளையாட்டுப்போட்டி மற்றும் வேறு நிகழ்ச்சியின்போது துப்பாக்கி பயன்படுத்தக்கூடாது என பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சட்டம் மனநல மருத்துவமனை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கிறது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை நேரடியாகக் கொலை குற்றங்களோடு தொடர்பு உள்ளதற்குச் சமம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வில், அமெரிக்காவில் 29 சதவிகித மக்கள் சொந்தமாக துப்பாக்கி வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.
Post a Comment