Top News

கொழும்பு குப்பைகளை அகற்றாவிடின் உரிய அதிகாரிகளை பதவி நீக்க நடவடிக்கை


கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­களில் குவிந்­துள்ள குப்­பைகள் அனைத்தும் எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் முழு­மை­யாக அகற்­றப்­பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாந­கர மற்றும் நகர சபை அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்தார்.
இதனை அதி­கா­ரிகள் நடை­மு­றைப்­ப­டுத்த தவறும் பட்­சத்தில் பாரா­ளு­மன்ற
அனு­மதி பெற்ற பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் பிர­காரம் உட­ன­டி­யாக
அமு­லுக்கு வரும் வகையில் அவ்­வ­தி­கா­ரிகள் பதவி நீக்­கப்­ப­டுவர் எனவும் அமைச்சர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.
கொழும்பு நக­ரத்தில் எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்­வினை முன்­வைக்கும் நோக்கில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மேல்­மா­கா­ணத்­திற்கு பொறுப்­பான மாந­க­ர­சபை மற்றும் நகர சபை அதி­கா­ரி­க­ளுடன் விசேட
சந்­திப்­பொன்று கொழும்பு மாந­க­ர­சபை கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது.
இச்­சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.

Post a Comment

Previous Post Next Post