பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அமைச்சர்களையும் விமர்சனம் செய்வதாயின் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுமாறு பிரதமர், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தெரிவித்துள்ளார்.
கள்வர்களை அரசாங்கம் காப்பாற்றுகின்றது என அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.இது தொடர்பிலேயே பிரதமர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர், ரஞ்சனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான் கள்வர்களை காப்பாற்றுவதில்லை, தனது கட்சித் தலைமை மீது நம்பிக்கையில்லா விட்டால் தயவு செய்து வெளியேறிச் செல்லவும். வெளியேறிச் சென்று எவரையேனும் விமர்சனம் செய்ய முடியும்.
ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்யக் கூடாது. என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்
Post a Comment