Top News

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த சீன ஊடகம்



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் புதிய சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளபட்டது. இந்தப் பகுதியானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் அண்டை நாடான பூடானின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் நிலையில், இந்தியா பூடானுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

1967 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மோதலிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தை அடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய ராணுவம், சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளது. இந்தியா தன்னுடைய ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும் எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும் சீனா தரப்பில் தினசரி ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. 

இந்தியா தரப்பில் எல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம், ராணுவத்தை திரும்ப பெற மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுவிட்டது. எல்லையில் பதற்றம்  நீடிக்கிறது.

இந்த நிலையில் சீனா, இந்தியா மற்றும் பூடானின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று சீன அரசின் தேசிய ஊடகமான சின்குவா கூறுகிறது.

Post a Comment

Previous Post Next Post