கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியை சந்தித்த அமைச்சர் அல்ஹாஜ் எ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்களின் ராஜ மௌனம் படிப்படியாக களைந்து அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் குதிரை சவாரி ஆரம்பித்துள்ளது தென்படுகிறது. எதிர்வரும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபை அல்லது உள்ளுராட்சி சபை தேர்தல் நடைபெற உள்ளது தெளிவாகும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துள்ளது.
பல மாதங்களாக அமைதிகாத்த தேசிய காங்கிரஸ் அணி சில நாட்களாக ஊடகங்களில் பேசுபொருளாக மாறிவரும் சந்தர்ப்பத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களும் தேசிய காங்கிரசும் தமது இருப்பை தக்க வைக்க சகல வழிகளிலும் தயாராகி வருகிறது. இந்த வகையில் கட்சியின் உட்கட்டமைப்பை சீர்செய்வதில் கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது தெளிவாகிறது.
கடந்த காலங்களில் அம்பாறையில் பெரிதாக அறிமுகம் இல்லாது இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசை அம்பாறையில் இவ்வளவு சக்திமிக்க இயக்கமாக உருவெடுக்க தேர்தலுக்கு சில காலங்களுக்கு முன்னரே இருந்து போராடி மரத்தின் கோட்டையில் பாரிய ஓட்டை உருவாக்க காரணமாக அமைந்த அன்வர் எம் முஸ்தபா அவர்களையும் இப்போது கட்சியில் உள்வாங்க தேசிய காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதும் கட்சியில் இணைப்பதுக்கான முயற்சிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் நம்பத்தகுந்த தரப்பின் மூலம் அறிய முடிகிறது.
இது ஒருபுறமிருக்க கட்சியை சரியான வியுகங்களுடன் வழிநடத்த வேண்டியுள்ளதால் கட்சிக்கு இளம் இரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் கட்சி இறங்க்கியுள்ளதும் அண்மைய காலங்களின் செயற்பாடுகளில் தெளிவாகிறது. அந்தவகையில் சட்டத்தரணிகள்,கல்வியலாளர்களை இணைக்கும் செயற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் பிரபல அரசியல் விமர்சகரும் ஒட்டக கட்சி முக்கியஸ்தருமான புர்கானையும் கட்சியில் இணைத்துக்கொண்டு மாகாண கொள்கைபரப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று அக்கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தரும் அரசியல் விமர்சக எழுத்தாளருமான ஹுதா உமர் அவர்களையும், இன்னும் சில பத்திரிக்கையாளர்களையும், அரசியல் ஆர்வம் உள்ள பிரமுகர்களையும் மற்றும் சில அரசியல் கட்சிகளின்பி ரதிநிதிகளையும் கட்சிக்குள் உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
கட்சியை விஸ்தரிக்கும் நோக்கில் இளம் தலைமுறைகளிடம் முக்கிய பொறுப்புக்களை வழங்கி தலைவர் அஸ்ரப்பின் வழியில் கட்சிக்கு உத்வேகம் கொடுக்க முற்பட்டிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.
அரசியலின் பிரதான தத்துவங்களான மேடைகளில் நன்றாக பேசக் கூடிய ஆற்றலும் எழுத்தாற்றலும் மிக்க ஒரு சக்தியை அமைச்சர் அதாவுல்லாஹ் ஒன்றுதிரட்டி வருவது கட்சிக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்க கூடியதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்துக்களில்லை.
என்றாலும் இனிவரும் காலங்களில் மரமா அல்லது மயிலா என்கிற போட்டி அம்பாறை அரசியல் இல்லாது ஒளிந்து மரமா அல்லது குதிரையாஅல்லது மயிலா என்கிற போட்டி நிகழும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. என்றாலும் மரத்தின் செல்வாக்கில் சிறிதளவான சரிவே நிகழும் என்றாலும் மயிலின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏனெனில் மயிலை உண்மையாக நேசித்த பலரும் மயிலின் மீது அதிருப்தியுடன் இருப்பதும் பதவிக்காக ஒட்டிக்கொண்டு கட்சியை சீரளிப்பவர்களும் மயிலின் கட்சிக்குள் அதிகரித்தமையே இந்த வீழ்ச்சிக்கான காரணமாகும். உதாரணமாக சாய்ந்தமருதில் மயிலின் முக்கிய பிரமுகர்களின் புகைச்சலையும் .சிலரின் நடவடிக்கைகளையும் கூறலாம்.
முகப்புத்தகத்தில் தமது கருத்துக்களால் ஒட்டகம் எனும் சின்னத்தை மக்கள் எண்ணங்களுக்கு கொண்டு சென்ற புர்கான்,ஹுதா உமர் போன்றோர்கள் பலரும் குதிரையில் தஞ்சம் புகுந்திருப்பது (இவர்களின் முகப்புத்தக ஆளுமையை குறைத்து மதிப்பிட முடியாது.)
அம்பாறையில் குதிரைக்கு சக்தி சேர்ப்பதாகவும் மு.அமைச்சர் அதாவுள்ளஹ்வின் ஆளுமையையும் அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை மக்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மாகாண எதிர்கட்சி தலைவர் உதுமாலெப்பையின் சேவையும் அட்டாளைச்சேனைக்கு மு.கா ஏமாற்றும் தேசிய பட்டியல் அதிருப்தியும் ,மற்றும் பல இளம் அரசியல் பிரமுகர்களின் சிந்தனையும் கட்சி முக்கியஸ்தர்களின் சிறந்த,தூரநோக்கு கொண்ட சிந்தனையும் அம்பாறையில் கட்சிக்கு புதிய உத்வீகத்துடன் குதிரை பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களில் குதிரை மாவட்டத்தின் சகல பாகங்களிலும் தமது இருப்பை தக்கவைக்கும் என்பதுடன் எதிர்வரும் மாகாண சபையில் அம்பாறையில் மூன்று ஆசனங்களையும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஒவ்வொரு ஆசனமுமாக ஐந்து ஆசனங்களை பெரும் என்பது காலம் எமது எதிர்பார்ப்பாகும்
அட்டாளைச்சேனை
கலீல் மௌலானா
Post a Comment