Top News

ஜம்மியதுல் உலமாவுக்கு சவால் விடுக்கும் பொதுபலசேனா அமைப்பு



சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் பேய் சேர்ந்து உயிரிழந்த இலங்கையர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் எதுவித தொடர்பையும் பேணவில்லை என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பகிரங்கமாக அறிவிக்க தயாரா என பொதுபல சேனா சவால் ஒன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளதாவது,

சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் பேய் சேர்ந்து பலியானதாக கூறப்படும் இலங்கை நபர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் எதுவித தொடர்பையும் பேணவில்லை அல்லது ஜம்மியதுல் உலமாவின் எதுவித செயற்பாடுகளிலும் குறித்த நபர் ஈடுபடவில்லை என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அறிவிக்க தயாரா என பொதுபல சேனா சவால் ஒன்றை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கும்­ப­டியும் அமெ­ரிக்கத் தூத­ரகம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளதாக பிரபல சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்ட நிலையில்,

எவ­ரா­வது ஒரு தனி­நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு நாமும் அர­சாங்­கத்தை கோரு­கிறோம் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா குறிப்பிட்டிருந்தது.

எமது நாட்டை இவ்­வா­றான சமூ­கத்­துக்கு எதி­ரான தீய செயல்­க­ளி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்கு அரச நிறு­வ­னங்­க­ளுக்கு எமது உத­வி­க­ளையும் ஒத்­தா­சை­க­ளையும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெரி­வித்­திருந்த நிலையில் இதற்கு பதில் அளித்த டிலந்த மேற்கண்ட சவாலை முன்வைத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post