நிர்கதியான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ள கட்டார் நிறுவனங்களின் உரிமையாளர்கள்

NEWS
0


சவுதி அரேபியாவில் சேவையில் ஈடுபட்ட கட்டார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், சவுதி அரேபியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டதால் அந்த நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்த இந்தியா, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், நிர்கதியான நிலையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அவர்கள் தங்குமிட வசதியின்றியும், வேதனமின்றியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், கட்டாருக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டாருக்கு, சவுதி அரேபியா உள்ளிட்ட சில வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளதன் காரணமாக சவுதியில் இருந்த கட்டார் நாட்டவர்கள் பலர் நாடுகடத்தப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top