(அஷ்ரப் ஏ சமத்)
பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ள 'வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்' மும்மொழியிலான நூல் வெளியீடு நேற்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் (04) இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசனிடன் நுாலின் பிரதி ஒன்றை நிலுக்சி வழங்கி வைப்பதனையும் படத்தில் காணலாம்.
இந் நிகழ்வின் அமைச்சா் மனோ கனேசன் உரையாற்றுகையில் - இலங்கையில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வட கிழக்கு இணையாமல் பௌத்த மதம் முதன்மை மதாமாகவும் பெட்டரல் ஆட்சி இல்லாமலும் சகல கட்சி அரயில் உறுப்பிணா்களும் இணைந்து அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது.
இதற்கு சகலரும் ஆதரவு வழங்க வேண்டும். கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம்களை இரவோடு இரவாக வெளியேற்றினாா்கள். அதற்காக நானும் காலம் சென்ற எனது நண்பா் ரவி ராஜ் இணைந்து தமது கண்டனத்தினை தெரிவித்து கொழும்பில் ஆர்பாட்டத்தினை நடாத்தி தமது எதிா்ப்பினை தெரிவித்தோம். . கடந்த மகிந்த ராஜப்கச் ஆட்சிக் காலத்திலும் இம் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. இவ் ஆட்சியிலும் தற்போதைய ஜனாதிபதி பிரதமா் தலைமையிலான ஆட்சியிலும் வடக்கில் இடம் பெயா்ந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே இந்த அரங்கில் இம் மக்களது நிலைமை பற்றி சர்வமத பொளத்த மத தலைவா்கள் சூழலியலாா்கள் இணைந்து இம் மக்கள் வில்பத்து காட்டினை அழிக்கவில்லை. அவா்கள் தாம் பரம்பரையாக வாழ்ந்து வந்த காணி வீடுகளையே கேட்கின்றனா். இது நியாயமான கோரிக்கை இந்த மக்களை மீள குடியமா்த்த அமைச்சா் றிசாத் பதியுத்தீன் மிகவும் உழைத்து வருகின்றாா்.
Post a Comment