File Image |
முஹம்மட் இப்றாஹிம்
அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள நெசவு கைத்தொழில் நிலையமொன்றிக்கு நேற்று முன்தினம் (9) ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விஜயம் மேற்கொண்டனர்.
அக்கைத்தொழில் நிலையத்தின் உரிமையாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் அமைச்சர் ரிசாத் கலந்துகொண்டார். குறித்த கூட்டம் நேற்றைய தினம் பி.ப.4.30மணிக்கு இடம்பெரும் என தெரவிக்கப்பட்ட போதிலும்,
அமைச்சரின் பிந்திய வருகையின் காரணமாக இரவு 10மணிக்கு பின்னரே கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பலரும் பேசிய பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசுவதற்கு எழுந்து சில நிமிடங்கள் பேசிய வேளையிலே மேடை நோக்கி கல்வீசப்பட்டது.
குறித்த கல்வீச்சு சம்பவத்தினால் அமைச்சர் தனது உரையினை நிறுத்திவிட்டு கூட்டத்தை நிறைவு செய்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக்கொண்டிருந்த போதும் அவரை நோக்கி கல்வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment