ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில் இன்று காலை சிலோன் முஸ்லீம் ஊடக வலையமைப்பின் காரியாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட்ட தாக்குதலை லண்டனில் இயங்கி வரும் லங்கா புரண்ட் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கின்றது.
"உண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம் " அவ்வாறு மக்களுக்கு உண்மைகளை தனது விருப்பு வெறுப்புகளுக்கப்பால் வெளிக்கொண்டு வந்த சிலோன் முஸ்லீம் மீதான இந்த தாக்குதல் நாட்டில் ஊடக தர்மம் இருக்கின்றதா என்ற கேள்வியை கேட்கச் செய்கின்றது .
ஐரோப்பிய நாடுகளில் ஊடக நிறுவனங்களுக்கும் , ஊடகவியலாளர்களுக்கும் இருக்கும் பாதுகாப்பு இலங்கையில் இல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
கடந்த காலங்களில் மகாராஜா நிறுவனம் , ரூபவாஹினி , யாழ் உதயன் , மற்றும் பல ஊடக நிறுவனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன அந்த காலகட்டங்களில் நாட்டில் அசாதாரண நிலை காணப்பட்டது ஆனால் இன்று இரண்டு தேசியக் கட்சிகள் இணைத்து நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்நிலையில் சிலோன் முஸ்லீம் ஊடக அலுவலகம் தாக்கப்பட்டமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
எதிர்காலத்தில் இவ்வாறான நிலை எந்தவொரு ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நிகழாமல் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் .
மீரா அலி ரஜாய்
பணிப்பாளர்
லங்கா புரண்ட் இணையத்தளம்
Post a Comment