இரு கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கும் கீழாடை(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்)என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம் : புகாரி 5787, நஸயீ)
எனது கீழாடை கரண்டைக் காலுக்கும் கீழே தொய்வாக இருக்குமாறு உடுத்திவந்தேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'அப்துல்லாவே! உமது கீழாடையை உயர்த்துவீராக!' என்றார்கள். நான் சிறிது உயர்த்தினேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள். 'இன்னும் உயர்த்தி உடுப்பீராக!' என்றார்கள். நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். அன்றிலிருந்து அப்படியே உடுத்திவருகிறேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூற, அப்போது அங்கிருந்த சிலர், எவ்வளவு உயர்த்தி உடுக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள். 'முழங்காலில் பாதி வரை' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 2086)
முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்த போது தொழுகையை இமாமான முன்னின்று நடாத்தினார் அவருடைய காற்சட்டை நீளமாக இருந்ததால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது..
Post a Comment