இலங்கையில் முதன்முறையாக இதயமாற்றுச் சந்திர சிகிச்சை!

NEWS
0

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக கண்டி வைத்தியசாலையில் இதய மாற்றுச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மூளைச் சாவு அடைந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் இதயம் மற்றும் இரு சிறுநீரகங்கள் தானம் செய்யப்பட்டிருந்தன.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுப் பெண் ஒருவருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளது என்றும் வேறு இருவருக்கு சிறுநீரங்கள் வழங்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதய மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணும், சிறுநீரகம் பொருத்தப்பட்ட இரண்டு நோயாளர்களும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என்றும், வைத்தியர்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணித்து வருகின்றனர் என்றும் கண்டி வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top