உலகநாடுகளின் எதிர்ப்புக்களை மீறி, வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொறுமை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஏவுகணை சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில்,”ஜி-20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடியது. இவர்களுக்கு வாழ்கையில் வேறு வேலைகள் கிடையாதா?
தென் கொரியாவும் ஜப்பானும் இந்த தொடர் ஏவுகணை சோதனைகளை எவ்வாறு பொறுத்துக்கொள்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும், சீனா வட கொரியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து, இவ்வாறான முட்டாள் செயல்களுக்கு முடிவு கட்டுமா? எனவும் அவர் டுவிட் செய்துள்ளார்.
Post a Comment