கட்டாருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று, மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ளன.
தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளிப்பதாக தெரிவித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம் உள்ளிட்ட ஆறு நாடுகள் கட்டாருடான ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துள்ளன.
இந்த தொடர்புகளை மீள இயக்குவதற்கு 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளை கட்டார் நிராகரித்துள்ள நிலையில், இந்த தடை தொடரும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
குறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், கய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
Post a Comment