நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நல்லிணக்கத்தை கீழ் மட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும். அரச பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை உருவாக்க எமக்கு தேவைப்பட்டது.
நாட்டுடன் மக்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளே குழுக்களாக பிளவடைந்து செயற்படுவார்கள்.
இலங்கையை நல்லிணக்க நாடாக மாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும். நாட்டில் மோதிக் கொள்வது தவறானதாகும் பாடசாலை மட்டத்திலிருந்து நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment