Top News

மக்கள் வறுமையில் இருக்கும் போது அமைச்சர்களுக்கு மேலும் சொகுசு வாகனமா?


நாட்டில் காணப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சர்களின் சொகு வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை வருந்தத்தக்கது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆசீர்வாதம் பெறுவதற்கும் தன்னைக் கைது செய்ய திட்டமிடுவதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து முறையிடுவதற்கு சென்றபோதே தேரர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 100 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இது பணம் படைத்தவர்களுக்கு பிரச்சினையல்ல. அன்றாடம் தேடி உண்பவர்களுக்கே பிரதான பிரச்சினையாகும்.
நாட்டில் மக்கள் முகம்கொடுத்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வை அரசாங்கம் காணவில்லை. இன்னும் இன்னோரன்ன பிரச்சினைகள் மக்களது வாழ்வாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன. 
இந்நிலையிலேயே அரசாங்கம் நேற்றும் பாராளுமன்றத்தில் பல கோடி ரூபா குறைநிரப்புப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனர் நிர்மானம் செய்தல், அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் போன்ற விடயங்களுக்கு மேலதிக நிதியை வழங்குமாறு குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post