கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
ஹெம்மாதகமயில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமயரூபம், கல்வி, பொருளாதாரம் மற்றும் நிர்வாக வாழ்வியல் பற்றி இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், விசேட அதிதியாக அமைச்சர் எம்.எச்.ஏ. கபீர் ஹாசிம் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment