அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணூவத்திற்கும் உள்ள படைபலம் ஒப்பீடு
இந்தியா–சீனா இடையே 4 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை அண்மையில் சீனா அழித்தது. மேற்கொண்டு சீன ராணுவம் சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதை தடுக்கவும் அங்கு இந்தியா ராணுவத்தை குவித்து உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வற்புறுத்தி வருகிறது.இதனால் எல்லை பகுதியில் பதட்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு அந்த எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்தது. 1962-ம் ஆண்டு போருக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் மோதல் போக்குடன் நீண்ட நாட்கள் எல்லையில் நேருக்கு நேர் ஆவேசத்துடன் நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் பேச்சு நடத்தின. அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பேச்சு தோல்வி அடைந்ததால் சீனாவுடனான கொள்கைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
சீனப் படைகள் இந்தியப் படைகளுக்கு கடுமையான சேதம் விளைவிப்பதில் 1962 ம் ஆண்டு வெற்றிகரமாக ஈடுபட்டது என 1962 ஆம் ஆண்டு போரை குறிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியா 1962 ஆம் ஆண்டு போல் இலை 2017 ல் இந்தியா மிகவும் வித்தியாசமானது என கூறி உள்ளார்.
இந்த நிலையில் சீனாவின் அரசு ஊடகம் குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான சமீபத்திய மோதல்கள் ஒழுங்காகக் கையாளப்படவில்லை என்றால், சீனா அதன் எல்லையை பாதுகாத்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என கூறி உள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீன இராணுவத்தை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் நிதி ஆதாரங்களை அதிகம் செலவிட்டு வருகிறது. இந்திய அரசு இதில் தாமதமாக இருந்தாலும், ராணுவ நவீன மாயமாக்களில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உலகின் மிகப்பெரிய சக்திகள் ஒருவருக்கு ஒருவர் அணிவகுத்து நிற்கின்றனர்
Post a Comment