கடந்த மாதம் ஞானசார தேரர்தான் ஊடகங்களின் வாய்களில் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பெயர் காரணம் பொலிசாருக்கு மண்துாவிவிட்டு மறைந்திருந்தாராம், நான்கு படைகள் அமர்த்தி தேடப்பட்டதாம் அவர் அமைச்சர் வீட்டில் இருக்கிறாராம் என்றெல்லாம் ஆயிரமாயிரம் செய்திகள், இடைக்கிடை பேஸ்புக்கில் தோன்றி கதைப்பார் ஆனால் பொலிசார் கைது செய்யவில்லை.
இறுதியில் தாமாக சரணடைந்தார். இதற்குள் நடைபெற்ற விடயங்கள் குறித்து பேச ஆயிரம் பக்கங்கள் வேண்டும். ஏன் இப்படி ஒரு நாடகம்? எதற்காக இந்த கூத்து? எல்லாம் ஒன்றிற்காகவே! மஹிந்தவை நல்லவர் என்று சொல்ல வேண்டும், இந்த ஒருகாரணத்திற்காக துவங்கப்பட்ட ஞானசார பிரச்சாரம் இடையில் ஆயிரம் கதைகளை கோர்த்துவிட்டது.
- ஹலாலுக்கு மீண்டும் போர்க்கொடி
- இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதம்
- நல்லாட்சி முஸ்லிம்களுக்கு மட்டும் ஆதரவு
இவைகள் இடையில் உருவாகியிருந்தாலும், முஸ்லிமகளின் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டு வியாபாரிகள் நஷ்டமடைந்தனர், உளவியல் ரீதியாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர்.
நாடகம் அரங்கேறி காட்சி முடிவடைந்து விட்டதாக இன்று எண்ணிக்கொண்டிருக்கிறோம், ஆனால் காட்சி முடியவில்லை. இன்று இலங்கையில் பிரச்சினை வரவேண்டும் என துடிக்கும் அரசியல்வாதிகள், இனவாதிகள் அனைவருக்கு பகடைக்காய் முஸ்லிம்கள் தான். இது தவிர்க்க முடியாததும் கூட.
தொடரும்....
Post a Comment