சப்னி அஹமட்-
நாட்டில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை அவசரதீர்மானமொன்றை நிறைவேற்றி அதற்கான நிதியாக 09 மில்லியன்ரூபாவினை கிழக்கு மாகாண சபை சேகரித்து அம்மக்களிடம் நேற்று (03)கிழக்கு மாகாண சபையின் இருந்து சென்ற உயர்மட்டக் குழு கையளித்தது. .
மாத்தறை, தெனியாய தொகுதிய மற்றும் பிட்டபெத்தர பகுதியில்வௌ்ளத்தால்பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும்சேதமடைந்தவர்களுக்கான கட்டிட பொருட்கள் மற்றும் உயிர்இழந்தவர்களுக்கான உதவிகள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உத்தியோகத்தர்களால் 09 மில்லியன் ரூபா அம்மக்களிடம்கையளிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாணத்தில் அன்று சுனாமி அனர்த்தத்தின் போது இப்பிரதேசமக்கள் எங்களுக்காக உதவினார்கள் அது இப்பிரதேச மக்களின் உதவித்தன்மையை வெளிக்கொண்டு காட்டினார்கள்அன்று இவ்வாறான மக்களின் உதவிகளை நாம் மறக்க முடியாமல்இவ்விடத்தில் நன்றி கூறுகின்றோம். ஒரு மாகாணத்தில் சிக்கல்கள்இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்அவ்வாறன உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம். இவ்வாறு ஒரு பாரியஅனர்த்தத்திற்குள் உள்ளான மக்களை பார்க்க வேண்டியது மக்கள் பிரநிதிகள்ஆகிய எங்களின் மிகப்பெரிய கடமையாகும்.
இவ்வாறன நிதிகளை திரட்டி இம்மக்களுக்காக உதவிய கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் கடையாற்றும் அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு உதவியமைக்குஇவ்விடத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதன் போது, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்குமாகாணசபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுனவர்த்தன, கிழக்குமாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் உள்ளிட்டவர்களுடன்கிழக்கு மாகாணசபையின் உயர் அதிகாரிகளுடன், அப்பிரதேச மக்கள்பிரதிநிதிகளும் அமைச்சர் சாகல ரத்னாவின் வருகைக்கு பதிலாக அவரின்பிரத்தியேக செயலாளரும் கலந்துகொண்டார்