எம்.ரீ. ஹைதர் அலி
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியினுடைய அபிவிருத்தி பணிகள் இருபக்க காணுடனான வீதியாக அமைப்பதற்குரிய அங்கிகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
இவ்வீதி புணரமைப்புக்காக சுமார் 1 கோடி 88 இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய்கள் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதியின் இரு மருங்கிலும் வடிகாண்கள் அமைப்பதற்குரிய அங்கிகாரம் கிடைக்கப்பெற்று அதற்குரிய விலைமனுக்கள் கோரப்பட்டிருப்பதுடன், மிக விரைவாக இதனுடைய வேலைகள் ஆரம்பிக்கபட இருக்கின்றன.
இவ்வேலைத்திட்டத்திற்கான நிதியினை பெறுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி. ரவூப் ஹக்கீம் அவர்களினுடைய நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
அத்துடன், இதனுடைய வீதியினை காபட் வீதியாக செப்பணிடுவதற்கு ஏற்கனவே மாகாண சபையினுடைய ஐ ரோட் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அதற்குரிய அனைத்து விதமான அங்கிகாரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதனால் இந்த வீதியினை சிறந்த முறையில் இருமருங்கிலும் வடிகாண்கள் அமைந்ததாக செப்பனிட்டு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இவ்வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவுள்ளது.
இருந்தபோதும், இவ்வீதியானது குறைந்தபட்சம் 6 மீட்டர் அகலமுடையதாக அமைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்காக சில இடங்களில் இருமருங்கிலுமுள்ள வீடுகளினுடைய வீட்டுச்சுவர்கள் உடைக்கப்பட வேண்டியதொரு சந்தர்ப்பம் ஏற்படலாம்.
ஆகவே இவ்வேலைத்திட்டத்திற்காக இவ்வீதியிலுள்ள பொதுமக்கள் அனைவரும் பூரண ஆதரவினை கொடுத்து மிக நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருக்கின்ற இவ்வீதியினை செப்பணிடுவதற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வீதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2017.08.17ஆந்திகதி - வியாழக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டதுடன், அவ்வீதியிலுள்ள பொதுமக்களிடமும் தனது ஆலோசனைகளையும். கருத்துக்களையும் பறிமாறிக்கொண்டார்.