அரநாயக்க, உஸ்ஸாபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றே வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 12 பேர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, அதில் கடும் காயங்களுக்குள்ளான ஒரு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயத்திலிருந்து.