Top News

125 தமிழ் மாணவ மாணவிகளுக்கு கொழும்பு மாவட்டத்தில் 4 நாட்கள் தலைமைததுவம், நுன்னறிவு, ஒழுக்கசீலா்கள் பயிற்சி


கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெரிபு செய்யப்பட்ட 125 தமிழ் மாணவ மாணவிகளுக்கு 4 நாட்கள் தங்கியிருந்து சர்வதேச வளவாளா்களினால் தலைமைததுவம், நுன்னறிவு, ஒழுக்கசீலா்கள் பயிற்சி கொழும்பு 4 பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியி்ல் நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சிகை மேல் மாகாண கல்வியமைச்சின் மற்றும் அமைச்சா் மனோ கனேசன் மகாணசபை உறுப்பிணா் வி்.கே குருசாமி ஆகியோா்  அனுசரனையில் நடைபெற்று வருகிற்து. இப் பயிற்சியை வழங்குவதற்காக சர்வதேச பயிற்சி நிறுவனமாக பங்களுரைச் சோ்ந்த கலாநிதி  பரவியலால் மற்றும் 5 வளவாளா்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றனா். ஆரம்ப நாளான இன்று அமைச்சா் மனோ கனேசன் மேல் மாகாண ஆளுனா் கே.சி. லோகேஸ்வரன், மேல்மாகாண கல்வியமைச்சா் ரன்ஜித் சோமவன்ச, மற்றும் கொழும்பு பாடசாலைகளின்  அதிபா்களும் கலந்து கொண்டனா் 

இப்பயிற்சி சர்வதேச தரத்திற்கு தமிழ் மாணவ மாணவிகளுக்கு 4 நாற்கள் ஹிந்துக் கல்லுாாியில் தங்க வைத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இப் பயிற்சிக்காக கொழும்பு, நீர்கொழும்பு அவிசாவளை, போன்ற பாடசாலைகள் இருந்து தெரிபு செய்ய்படபட்ட 125 மாணவா்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. 

(அஷ்ரப் ஏ சமத்)


Previous Post Next Post